சென்னையில் 9-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு குவாரி நீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகம்

மாங்காடு அருகே கல்குவாரிகளில் உள்ள தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 9-ம் தேதி முதல் தினசரி 30 மில்லியன் லிட்டர் வீதம் வழங்கப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் z மில்லியன் கனஅடி. தற்போது இந்த ஏரிகளில் 235 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4,900 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி காணப்படுவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்தது.
இதையடுத்து பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது போதாது என்பதால், சென்னையைச் சுற்றியுள்ள கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து பயன் படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மாங்காடு அருகே சிக்கராயபுரம் கிராமத்தைச் சுற்றி கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை, குடிக்கப் பயன் படுத்தலாமா என்று நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில், கல்குவாரி தண்ணீரைச் சுத்திகரித்து குடி நீருக்குப் பயன்படுத்தலாம் என்று அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த குவாரிகளில் இருந்து செம்பரம் பாக்கம் ஏரிக்கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சிக்கராயபுரத் தைச் சுற்றியுள்ள கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தென்சென்னை மற்றும் மத்திய சென்னையின் ஒருபகுதி மக்களுக்கு 9-ம் தேதி (நாளை மறுநாள்) முதல் தினமும் 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *