காவல் ஆணையர் எச்சரிக்கை எதிரொலி: காவல் நிலையங்களில் ஒரே நாளில் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டன
காவல் ஆணையர் எச்சரிக்கை எதிரொலியாக சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே நாளில் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காலை 11 முதல் மதியம் 12.30 மணிவரையும் இரவு 8 முதல் 9 மணிவரையிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் தினமும் பொது மக்களிடம் புகார் மனுக்களை கட்டாயம் பெற வேண்டும்.
மீறுபவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரித் தார்.
காவல் ஆணையரின் அறிவிப்பை தொடர்ந்து அனைத்து ஆய்வாளர்களும் புகார் மனுக்களை பெற்றனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.