வேந்தர் மூவீஸ் மதனின் நீதிமன்ற காவல் ஜூன் 20 வரை நீட்டிப்பு
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் நீதிமன்றக் காவல் ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேந்தர் மூவீஸ் திரைப்படத் தயாரிப்பு, விநியோக நிறு வனத்தின் உரிமையாளர் மதன். இவர் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி மாணவர்கள், பெற்றோரிடம் ரூ.84.24 கோடி வசூலித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மதன் 179 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து மதன் ஜாமீனில் வெளியே வந்த நிலை யில், ரூ.84.24 கோடிக்கு சட்ட விரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை யினர் அவரை கடந்த மே மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மதனின் நீதி மன்றக் காவல் நேற்றோடு முடிந் தது. இதையடுத்து, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிபதி அருள்முருகன் முன்பு மதன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், ஜாமீன் கோரி மதன் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.