கத்தார் இந்தியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்டாலின் கடிதம்
கத்தாரில் வசிக்கும் இந்தியர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கத்தார் நாட்டுடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதாக சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்களிடையே பதற்றமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள இந்தியர் களின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலை யில் உள்ளனர். வளைகுடா நாடு களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவு, வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் உள்விவகாரம் என தாங்கள் கருத்து தெரிவித் துள்ளீர்கள்.
இந்தச் சூழலில் கத்தா ரில் உள்ள இந்தியர்களின் பாது காப்பு மிக மிக முக்கியமானதாகும். கத்தாரில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற் கான நடவடிக்கையை இந்திய வெளியுறவுத் துறை ஏற்கெனவே தொடங்கியிருக்கலாம் என கருதுகிறேன்.
இந்த சிக்கலான நேரத்தில் கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தோஹாவில் உள்ள தூதரகம் மூலம் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.