தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறன் குழந்தைகள் பூங்கா: ரூ.40 லட்சத்தில் மதுரையில் பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்படுகிறது
குழந்தைகளுக்கு பூங்காவில் விளையாடுவது குதூகலமான விஷயம். அதனால், மாநகராட்சி கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் முதல் கிராம ஊராட்சிகள் வரை மக்களுக்கான அடிப்படை வசதி களைச் செய்து கொடுப்பதற்கு இணையாக, குடியிருப்புகள் அமைந்த பொதுவெளியில் பூங் காக்கள் அமைப்பதற்கும் முக்கி யத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மாற்றுத்திறன் குழந்தை களை மனதில் வைத்து பூங்காக் களை அமைப்பதில்லை. முதன் முறையாக தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக பொது நிதி, தனியார் நிதியுதவி பெற்று ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளும், சராசரி குழந்தைகளைப் போல ஊஞ்சல் விளையாட ஆசைப்படு வர். ஆனால், கீழே விழுந்து விடு வோம் என்ற அச்சத்தில் விளை யாட மாட்டார்கள். அவர்கள் ‘சீட்’ பெல்ட் அணிந்து தனியாக ஆடு வதற்கும், நடக்க முடியாத குழந் தைகள் வீல் சேருடன் அமர்ந்தும், பெற்றோருடன் அமர்ந்து ஆடுவதற் கும் பிரத்தியேகமாக ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சறுக்கு விளையாட்டில் சாதாரண குழந்தைகள் வேகமாக சறுக்கி கீழே விழுந்து விடுவர். அப்படி விளையாடுவதற்கு ஆட்டிசம், மன வளர்ச்சி குழந்தைகள் அச்சப்படுவர். அதனால், மெதுவாக விழும் வகையில் ரோலர் ப்ளேடு சறுக்கு விளையாட்டு உபகரணம் உள்ளது. மற்றொருபுறம் வீல்சேரில் சென்று விளையாடும் பேஸ்கட் பால் மைதானமும் தயாராகிறது. மாற்றுத்திறன் குழந்தைகள் நடப்பதற்கு ஏற்ப பிரத்யேகமான டைல்ஸ்களை கொண்டு பூங்காவின் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்கள்
மின்விசிறியுடன் ஓய்வு அறை கள், சாப்பிடுவதற்கு தனி அறைகள், குழந்தைகளும், அவர்கள் பெற் றோரும் கலந்துரையாடும் அரங்கும் உள்ளது. இப்படி இங்குள்ள ஒவ் வொரு விளையாட்டு உபகரண மும், பூங்காவின் அமைப்பும் மாற் றுத்திறன் குழந்தைகளை மனதில் கொண்டு பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பூங்காவின் சிறப்பு அம்சம் ஆகும். இங்கு, 10 வகை விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பூங்காவுக்கு அடித்தளமிட்ட வர் திருநெல்வேலி ஆட்சியராக பதவி உயர்வு பெற்று செல்லும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி. இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநகராட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் பூங்காக்கள் உள்ளன. இவை சராசரி குழந்தைகளுக்கான விளை யாட்டு உபகரணங்களுடன் அமைந் துள்ளன.
அந்த பூங்காக்களுக்கு மாற் றுத்திறன் குழந்தைகள், பெற் றோருடன் சென்றால் மற்ற குழந்தைகள் விளையாடுவதை அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இதை நாம் கவனித்திருப்போம்.
அதனால், மதுரை மாநகராட்சி ஆணையராக வந்தபோதே, ஏதா வது ஒரு இடத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக பூங்கா அமைக் கத் திட்டமிட்டேன். அப்படி உரு வானதுதான், இந்த பூங்கா. பெங்க ளூரு, கொல்கத்தா போன்ற நகரங் களில் இதுபோன்ற பூங்காக்கள் உள்ளன.
தமிழகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக இப்படி யொரு பூங்கா அமைவது இதுவே முதல்முறை என்று அவர் கூறினார்.
ஐம்புலன் ஊக்குவிப்புத் தோட்டம்
பூங்காவைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க உள்ள மதுரை குரூப் லிவ்விங் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஏ.சந்திரசேகரன் கூறியதாவது: பூங்காவில் 50 சதவீத இடத்தில் விளையாட்டு உபகரணங்களும், 50 சதவீத இடத்தில் ஐம்புலன் ஊக்குவிப்புத் தோட்டமும் (sensory garden) உருவாக்கப்படுகிறது. பூக்கள், செடி, கொடிகளைத் தொடுவது, காண்பது, சுவைப்பது, நுகர்வது அடிப்படையில் குழந்தைகள் குதூகலமடையவும், புத்துணர்ச்சி தரும் வகையிலும் இந்த தோட்டம் உருவாக்கப்படுகிறது.
சிறிய குன்றில் இருந்து நீர் வழிந்தோடும் சத்தத்தைக் கேட்கவும், மீன் தொட்டிகளைப் பார்த்து மகிழும் வகையிலும், தொட்டால் சத்தம் கேட்கும் வகையிலான இசைக்கருவிகள் வைக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இதுபோன்ற பூங்காக்களை வீடியோவில் பார்த்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது என்றார்.