மண்ணெண்ணெயை எரிபொருளாக கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் இஸ்ரோ தீவிரம்: 6 டன் எடையை சுமந்து செல்லும்

‘மண்ணெண்ணெயை எரிபொரு ளாகக் கொண்டு, 6 டன் எடையை சுமந்து செல்லும் திறனுள்ள செமி கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன’ என்று திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக இயக்குநர் பி.வி.வெங்கட கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்டதைத் தொடர்ந்து, மகேந்திர கிரி இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக இயக்குநர் பி.வி.வெங்கட கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பி.வி.வெங்கடகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் முதல்முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது. இந்த ராக்கெட் எடுத் துச் சென்ற ஜிசாட்-19 செயற்கை கோள் இன்னும் 3 தினங்களில் செயல்படத் தொடங்கும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டின் கருவிகள் தயாரிக்கப்பட்டு, அவை மகேந்திரகிரிக்கு கொண்டுவரப் பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 199 முறை சோதனைகள் செய்யப்பட் டன. கடைசியாக ராக்கெட் ஏவு வதைப் போலவே, எரிபொருள் நிரப்பி முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. இதன் வெற் றியைத் தொடர்ந்து, இந்த ரக ராக்கெட்டை அதிகளவில் தயா ரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 6 டன் எடை வரை யுள்ள செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் செமி கிரை யோஜெனிக் இன்ஜின் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இதில், திரவ ஹைட்ரஜனுக்கு பதிலாக, மண்ணெண்ணெய் எரிபொருளாக பயன்படுத்தப்படும். `இஸ்ரோசின்’ எனப்படும் இந்த மண்ணெண்ணெய் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது.

3 ஆண்டுகளில் முடியும்

செமி கிரையோஜெனிக் இன்ஜி னுக்கு தேவையான கருவிகள் பல் வேறு பகுதிகளில் தயாரிக்கப் படுகின்றன. அவற்றை சோதனை செய்ய, மகேந்திரகிரியில் சோதனை தளங்கள் அமைக்கப்படுகின்றன. 3 முதல் 4 ஆண்டுகளில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் பயன் பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

சந்திராயன்- 2

நிலவில் மெதுவாக தரையிறங் கும் வகையில், சந்திராயன் – 2 விண்கலம் வடிவமைக்கப்பட் டுள்ளது. இதற்கான முதல் கட்ட சோதனைகள் முடிந்துள்ளன. இது, ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம், 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குல சேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொழில்நுட்ப ரீதியாகவும், பூகோளரீதியாகவும் சாத்தியக்கூறுகள் இருக்க வேண்டும். ஆய்வு முடிந்த பிறகே இதுபற்றி தெரியவரும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *