கடன் தள்ளுபடி செய்யக் கோரி ம.பி.யில் விவசாயிகள் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாப பலி
மத்தியபிரதேச மாநிலத்தில் போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய தில் 5 பேர் உயிரிழந்தனர். இதுதொடர் பாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் விவசா யிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 1-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருட்களைச் சாலையில் கொட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதற்கிடையில் மான்ட்சார் மாவட்டம் பை பர்ஸ்நாத் பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தைக் கைவிட வேண்டும் என போலீஸார் விவசாயிகளிடம் வலியுறுத்தினர்.
அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததை அடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்த போது வன்முறை வெடித்தது. பஸ்களுக்குத் தீ வைக்கப்பட்டன. விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் துப்பாக் கிச்சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டனர். மேலும் காய மடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதனைத் தொடர்ந்து மான்ட்சார், ரட்லாம், உஜ்ஜைனி உள்ளிட்ட பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப் பட்டுள்ளது. விவசாயிகள் கொல்லப் பட்டதை அடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
5 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலை மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் மறுத்துள்ளார். ஆனால் போலீஸார் கூறும்போது, ‘‘பஸ் களுக்குத் தீ வைத்தவர்கள் மீது ரிசர்வ் போலீஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’’ என்றனர்.