காபூலில் சர்வதேச மாநாடு நடந்த சமயத்தில் இந்திய தூதரகத்துக்குள் ராக்கெட் விழுந்தது: தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் எச்சரிக்கை

 

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் சர்வதேச மாநாடு நடந்து கொண் டிருந்த வேளையில் இந்திய தூதரகத்தின் மீது ராக்கெட் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் கடந்த புதன்கிழமை அன்று வெடி குண்டு நிரப்பப்பட்ட டிரக்கை ஓட்டி வந்து தாலிபான் தீவிரவாதி கள் வெடிக்கச் செய்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 300 பேரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை பொது மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். எனினும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தொடர்ந்து 5-வது நாளாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின் றனர். குறிப்பாக ஆப்கானிஸ் தானின் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் ஹனீப் அத்மார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஆப்கானிஸ் தானில் அமைதியை ஏற்படுத்த, சர்வதேச நாடுகளில் ஆதரவை கோரும் வகையில் ‘காபூல் நட வடிக்கை’ என்ற பெயரில் அமைதி மற்றும் ஒத்துழைப்புக் கான உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் இந்தியா உள்பட 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதையொட்டி தலைநகர் காபூல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இம்மாநாட்டில் பேசிய ஆப் கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ‘‘தலிபான் தீவிரவாதிகள் அமைதி பாதைக்குத் திரும்ப வேண்டும். கடைசிமுறையாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம். இதைப் பயன்படுத்திக்கொள்ள மறுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்’’ என எச்சரித்தார்.

இந்நிலையில் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் கைப்பந்து மைதானத்துக்குள் ராக்கெட் விழுந் தது. அப்போது மைதானத்துக்குள் யாரும் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் மாநாடு நடந்த சமயத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் காரணமாக காபூலில் பதற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *