நேபாளத்தின் புதிய பிரதமர் ஷேர் பகதூர்

நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட், நேபாள காங்கிரஸ், மாதேஸி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

ஆட்சியை பகிர்ந்து கொள்ள கூட்டணி கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி 9 மாதங்கள் பிரதமராக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரசண்டா கடந்த 24-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் நேபாள காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேர் பகதூர் தியூபா (70) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கெனவே 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ள நிலையில் 4-வது முறையாக பதவியேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *