நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு
மாதம் ஒருமுறை மட்டும் ஊசி போடும் வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் உடல் நலக்கோளாறினால் அவதிப்படுகின்றனர்.
எனவே தினமும் ஊசி மருந்தில் இருந்து தப்பிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசுதோஸ் சில்கோட்டியும் ஒருவர்.
புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும். இதை 2-ம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது 2-ம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு குளுககான்-லைக் பெப் டிட்-1 என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இது இணையத்தில் இருந்து இன்சுலீனை வெளியேற்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. தற்போது புதிதாக கண்டு பிடித்துள்ள மருந்து ‘ஜெல்’ போன்ற தோற்றம் உடையது.
இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.