பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2017), ஜெ7 (2017) அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ5 (2017), மற்றும் ஜெ7 (2017) ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சாம்சங் வழங்கியுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2017), மற்றும் ஜெ7 (2017) அறிமுகம்
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ5 (2017), மற்றும் ஜெ7 (2017) ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக கேலக்ஸி ஜெ3 (2017) ஸ்மார்ட்போனினை சாம்சங் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜெ5 மற்றும் ஜெ7 ஸ்மார்ட்போன்களில் 13 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 4ஜி எல்டிஇ, வோல்ட்இ, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளதோடு 7.9 எம்எம் அளவு தடிமனாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2017):
- 5.2 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி சூப்பர் AMOLEDடிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட், கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017):
- 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- 3600 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2017) மற்றும் கேலக்ஸி ஜெ7 (2017) கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே 304 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,600 மற்றும் 369 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,615 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஜூன் மற்ரும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கும் வரும் என்றும் மற்ற சந்தைகளில் விற்பனைக்கு வருவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.