பிளாஸ்டிக் அரிசியில் பந்து விளையாடிய சிறுவர்கள்: வீடியோ பரவியதால் மாட்டிய விற்பனையாளர்கள்
உத்தரகாண்ட்த்தில் வெளி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசியால் செய்த பந்தை கொண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் விற்பனையாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
பிளாஸ்டிக் அரிசியில் பந்து விளையாடிய சிறுவர்கள்: வீடியோ பரவியதால் மாட்டிய விற்பனையாளர்கள்
ஹல்த்வானி:
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சந்தையில் இருந்து பிளாஸ்டிக் அரிசியை வந்து சமைத்த பால் என்ற குடும்பத்தினர், சாப்பாட்டின் ருசியில் வித்தியாசம் இருந்ததை உணர்ந்தனர்.
மேலும், பிளாஸ்டிக் அரிசியை கொண்டு சிறுவர்கள் பந்து செய்து கிரிக்கெட் விளையாடினர். சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து நகர நீதிபதி கூறுகையில், “உணவு பாதுகாப்பு துறை மற்றும் முனிசிபர் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை மேற்கொள்வார்கள். கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.