புதுவரவு: ஜூன் 22-இல் இந்தியாவில் வெளியாகும் ஒன்பிளஸ் 5

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2017 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 5 ஜூன் 22-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் 20-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கருப்பு நிற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, எல்இடி பிளாஷ், 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் பெரிய செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் 7 பிளஸ் போன்றே காட்சியளிக்கிறது. டூயல் கேமரா அமைப்பு கொண்டுள்ள ஒன்பிளஸ் 5 முன்னதாக வெளியான தகவல்களுக்கு முரணான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி வெளியிட்ட தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் DxO கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஒன்பிளஸ் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே, 1440×2560 பிக்சல் ரெசல்யூஷன்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 8 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* இரட்டை கேமரா அமைப்பு
* வாட்டர் & டஸ்ட் ப்ரூஃப் வசதி
புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் கேமரா தரம் குறைந்த வெளிச்சத்திலும் அழகிய புகைப்படங்களை எடுக்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் அறிமுக நிகழ்ச்சி மதியம் 12:00EDT இந்திய நேரப்படி ஜூன் 20, இரவு 9:30 மணிக்கு துவங்குகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 5 மும்பையில் ஜூன் 22, மதியம் 2.00 மணிக்கு துவங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *