பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், சக நாட்டை சேர்ந்த பேப்லோ காரன்னோ பஸ்டாவை இன்று சந்திக்கிறார். பாஸ்டாவை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்களில் ஜெலீனா ஒஸ்டா பென்கோ (லாத்வியா), பாசின்ஸ்சி (சுவிட்சர்லாந்து) ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
ஆனால் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த ஆட்டங்கள் இன்று நடக்கிறருது.
ஒரு காலிறுதியில் உலகின் 4-ம் நிலை வீரரும், 9 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) சக நாட்டை சேர்ந்த பேப்லோ காரன்னோ பஸ்டாவை சந்திக்கிறார்.
20-ம் நிலை வீரரான பாஸ்டாவை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பஸ்டா 4-வது சுற்றில் முன்னணி வீரரான ரோனிக்கை தோற்கடித்து இருந்தார். இதனர் அவர் நடாலுக்கு கடும் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் மோதும் வீரர்கள் விவரம்:-
- ஆண்டிமுர்ரே (இங்கிலாந்து)- நிஷிகோரி (ஜப்பான்).
- வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)- சிலிச் (குரோஷியா).
- ஜோகோவிச் (செர்பியா- டொமினிக் தீயம் (ஆஸ்திரேலியா).