ஜப்பான் அணு உலையில் விபத்து: 5 தொழிலாளர்கள் பாதிப்பு
ஜப்பானின் அணுஉலை ஆராய்ச்சி கூடத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 ஊழியர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜப்பான அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஜப்பான் அணு ஆராய்ச்சி கூடத்தில் புளூட்டோனியத்தை கையாளும்போது ஏற்பட்ட விபத்தில் 5 பணியாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட மூலக்கூறு அடங்கிய அணுசக்தி பொருள் பிளவுபட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு கைகால், மூக்கு, நுரையீரல் ஆகிய பகுதிகளில் தொற்று ஏற்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளது. ஆனால், பணியாளர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் அணு ஆராய்ச்சி மையம்
தெரிவித்துள்ளது.
அவர்கள் கதிரியக்க சிகிச்சை மருத்துவ மையத்துக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.