ஈரானில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல்
ஷியா முஸ்லிம்களின் நாடான ஈரான் நாடாளுமன்றத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் தாக்குதல் தொடர்பான காரணம் குறித்தும் தெரியவில்லை. இதற்கிடையே தெக்ரானில் மற்றொரு தாக்குதலும் நடைபெற்றது. அங்குள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அருகே மறைந்த மதகுரு கோமெனியின் கல்லரை மாடம் உள்ளது. அங்கு புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.