கார் ஓட்டிய இளம் பெண் கைது – சௌதியில் …

 

சௌதி அரேபியாவை சேர்ந்த லூஜெய்ன் அல் ஹத்லூல் (27), இளம்பெண்ணான இவர் சமூக ஆர்வலராக இருந்து பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விஷயத்தை மீறி செயல்பட்டதற்காக லூஜெய்ன் இரு தினங்களுக்கு முன்னர் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைதான பின்னர், காவலில் வைக்க அழைத்து செல்லப்பட்டாரா என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

மேலும், தனது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் குழுவான Amnesty International சார்பில் பேசிய ஹதீத் என்பவர், லூஜெய்ன் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது நியாயமில்லாத ஒன்று. அதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *