திருமணத்துக்கு மறுக்கும் காதலன்: கால் சிலம்புடன் புகார் கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு

 

மதுரையில் திருமணத்துக்கு மறுக்கும் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி, கால் சிலம்புடன் ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை செல்லூர் சுயராஜ்ஜி யபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (எ) பேபி (28). இவர் நேற்று காலை தலைவிரி கோலத்துடன் வலது கையில் கால் சிலம்புடனும், இடது கையில் காதலனின் புகைப்படத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு வந்தார். அவர் புகார் மனுவும் வைத்திருந்தார்.

அவர் கூறியதாவது: மதுரை கோவலன் நகரைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தேன். திருமணம் செய்து கொள்வார் என நம்பினேன். அவரது சகோதரிக்கு திருமணம் செய்தபின் என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து என்னை ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். காதலனுடன் சேர்த்து வைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரிடம் அவர் புகார் மனுவை கொடுத்தார். சிலம்புடன் புகார் கொடுக்க வந்த பெண்ணால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *