தம்பி ராமையாவின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ ஜூன் 16-ம் தேதி வெளியீடு

 

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.

பிரபல இயக்குநர், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி நடிக்கும் படத்துக்கு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இன்பசேகர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த பயணமே ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் கதை.

ரேஷ்மா ரத்தோர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பி.கே.வர்மா ஒளிப்பதிவும், இமானின் இசையும், யுகபாரதியின் பாடல் வரிகளும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இத்திரைப்படத்தின் ட்ரய்லர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. படம் 16-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *