ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும். டெல்லியில் கம்யூனிஸ்டு தலைவர் சீதா ராம்யெச்சூரியை பா.ஜனதா வினர் தாக்கவில்லை என்றார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் பற்றி கேட்டதற்கு, தமிழக மியூசிக் சேரில் யார் இருப்பார்கள், யார் இருக்க மாட்டார்கள் என்று தனக்கு தெரியாது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.