எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆதரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய். ஜவஹர் அலி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து தனது கட்சியின் முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
அண்ணா தி.மு.க. (அம்மா) தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை, அவரது இல்லத்தில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒய். ஜவஹர் அலி தலைமையில் அக்கட்சியின் துணைத் தலைவர்களான செய்யது யாகூப், நூர்பாய், பொதுச் செயலாளர் செய்யது இப்ராகீம், பொருளாளர் அப்துல் சமது, செயலாளர்களான முஜிபூர் ரகுமான், நாசர், வாகீத், டாக்டர் அப்ரோஸ், சென்னை மாவட்டச் செயலாளர் யூசுப் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அண்ணா தி.மு.க. (அம்மா) அணிக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் தங்களது முழு ஆதரவினை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *