‘நீட்’ தேர்வின் நோக்கம்: மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் மருத்துவக் கல்வி யின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மொழிவாரி பாரபட்சம் காட்டப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான வழக் கில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் அமித்பிஸ்வாஸ் அனுப்பியுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு இந்திய மருத்துவ கழகத்துக்கு உண்டு. இந்தியாவில் மருத்துவ கல்வி தரத்தை முறைப் படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த் துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதும் மருத்துவ கழகத்தின் நோக்கமாகும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதன்படி பொது மருத்து வம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்த 2016-ல் முடிவு செய்யப்பட்டது. இதற்காக உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப் பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

நீட் தேர்வு நடத்தும் பொறுப்பு சிபிஎஸ்இ-யிடம் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் 28.4.205-ல் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில் நாடு முழுவதும் மே 7-ல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

முன்னதாக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து இந்தி, ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழி களில் வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டது.

மொழி பாரபட்சம் இல்லை

மொழி பாரபட்சம் இல்லா மல் நீட் தேர்வில் வெற் றிப் பெறுபவர்கள் அனைத்து கோட் டாவில் சேர தகுதியானவர்கள்.

எனவே இந்த பதிலை ஏற்று நீட் தேர்வு முடிவு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *