சத்தியமூர்த்தி பவனில் மோதல்: காங். பாரம்பரியத்துக்கு அழகல்ல – குமரிஅனந்தன் பேட்டி
சத்தியமூர்த்தி பவனில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல என்று தமிழக காங் கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் குமரிஅனந்தன் தெரி வித்தார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
நான் தனி கட்சி வைத் திருந்தபோது மகளிர் பிரிவின் சார்பில் வீடுதோறும் தோட்டம் என்ற திட்டத்தை தொடங்கி, மகளிருக்கு விதைகளைக் கொடுத் தேன். ஆனால், இன்று சத்திய மூர்த்தி பவனில் ஒருவருக் கொருவர் உதை கொடுக்கின்றனர். இது காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல.
மதுவுக்கு எதிராக இதுவரை 14 முறை பாதயாத்திரை மேற் கொண்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வால், மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களை ஒன்று திரட்டி, காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி கோவை யில் உண்ணாவிரதம் மேற்கொள் ளவுள்ளேன். இந்த உண்ணா விரதத்தில் கட்சி பேதமின்றி அனை வரும் பங்கேற்க வேண்டும்.
தமிழகத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். பனை மரங்களால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமா னம் என்ற திட்டத்தை நான் கொடுத்துள்ளேன். எடை குறை வான பனைமரம் ஏறும் கரு வியை கண்டுபிடித்து, பனை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்ய முடியாது. எனவே, இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததை திரும்பப்பெற வேண்டும் என்றார்.