பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு நவீன மடக்கு குச்சிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
இந்த நிதியாண்டு 10 ஆயிரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகளை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
கடந்த 2016-17-ம் நிதியாண் டில் மாற்றுத்திறனாளி களுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் 5 ஆயிரம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி அரசாணை வெளியிடப்பட்டு, நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் நடக்கும்போது 4 அல்லது 5 அடிக்கு முன்பாக இருக்கும் தடைகளை அதிர்வுகளின் மூலம் முன்கூட்டியே உணர்ந்து செயல்பட ஏதுவாக இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கப்படுகின்றன.
பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு உயர் தொழில்நுட் பத்துடன் கூடிய ஒளிரும் மடக்கு குச்சிகளை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்த நிதியாண்டில் 10 ஆயிரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல் வழங்க ரூ.3 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.