தமிழகம் முழுவதும் 400 போலீஸார் இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு

தமிழகம் முழுவதும் 400 போலீஸாரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள ஆண், பெண் இரண்டாம் நிலை காவலர்கள், தலைமைக் காவலர்கள் 400 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ் வொருவரின் விருப்பத் தின்பேரில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 85 பேர் இடமாற்றம் கேட்டுச் சென்றுள்ளனர். திருநெல்வேலிக்கு 71 பேரும், மதுரைக்கு 60 பேரும், சேலத்துக்கு 20 பேரும் இடமாற்றம் கேட்டுச் சென்றுள்ளனர்.

தமிழக ரயில்வே காவல் பிரிவில் சென்னைக்கு 29 பேரும், திருச்சிக்கு 5 பேரும் இடமாற்றம் கேட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *