மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.18 கோடி நிவாரணம்

மத்திய தொழிலாளர் நல அமைச் சகத்தின் சென்னை பிராந்தியம் சார்பில், கடந்த 3 ஆண்டுகளில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் இடையிலான வழக்குகளில் தீர்வு காணப் பட்டு, 30 ஆயிரம் தொழிலா ளர்களுக்கு நிவாரணமாக ரூ.18 கோடியே 50 லட்சம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் அமைச்சக சென்னை பிராந்தி யத்தின் 3 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சகத்தின் சென்னை பிராந்திய (தமிழ்நாடு, புதுச்சேரி) துணை தலைமை தொழிலாளர் ஆணையர் வி.ஸ்ரீநிவாஸ் பேசியதாவது:

சென்னை பிராந்தியம் சார்பில், கடந்த 3 ஆண்டுகளில் தொழிலாளர்களிடமிருந்து 228 வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ்கள் பெறப்பட்டன. தொழிலாளர் நல அமைச்சகத்தின் சமரசத்தால் 220 வேலை நிறுத்தங்கள் கைவிடப்பட் டுள்ளன.

மேலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் இடை யிலான 1,386 வழக்குகள் தொடர்பாக சமரச பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட் டுள்ளன. அதில் 159 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.18 கோடியே 50 லட்சம் பெற்றுத்தரப்பட் டுள்ளது. மேலும் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த 120 உத்தரவு கள் உடனடியாக செயல்படுத்தப் பட்டுள்ளன.

மேலும் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி 724 தொழிலாளர் கள், 1,785 வழக்குகளை தொடர்ந்தனர். அதில் ரூ.83 லட்சத்து 73 ஆயிரம் நிவாரணமாகவும், ரூ.7 லட்சத்து 27 ஆயிரம் இழப்பீடாகவும் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது.

பணிக்கொடை சட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 835 வழக்குகள் தொடரப்பட்டு, அதில் 950 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.4 கோடியே 82 லட்சம் மதிப்பில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் சென்னை மண்டல ஆணையர் கே.சேகர், மதுரை மண்டல ஆணையர் பி.எல்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *