மோகன் பாகவத்துக்கு சிவசேனா மீண்டும் ஆதரவு
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் கூறுகையில், ‘வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் தனித்து செயல்படும் முடிவை எடுக்கலாம்.
இந்து தேசியத்தின் கனவை பூர்த்தி செய்ய ஆஎஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை விட வேறு ஒருவர் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன், முடிவு செய்ய இன்னும் போதுமான காலம் இருக்கிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக மோகன் பாகவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்றார்.