மாநில நீச்சல் போட்டி: சென்னை மாணவர் தங்கம் வென்றார்
சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்த மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர் ஹரிஷ் பாலாஜி 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 34-வது சப்-ஜூனியர் மற்றும் 44-வது ஜூனியர் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்தது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் பாலாஜி 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 200 மீட்டர், 800 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றார். ஹரிஷ் பாலாஜி சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் முனியாண்டியிடம் இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்.