சாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. ஷிகார் தவான் சிறப்பான விளையாடி சதம் விளாசினார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர், ஷிகார் தவானுடன், தோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் அடித்தார். 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பாண்டியா 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும், 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது.
இலங்கை அணி தரப்பில் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும் மலிங்கா, லக்மல், பிரதீப் ஆகியோ தலா 70 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.
இதனையடுத்து 322 ரன்கள் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. திக்வெல்லா மற்றும் குனதிலகா தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் திக்வெல்லா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்ச்சி செய்தனர். ஆனால், இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை 170 ரன்களை எட்டியபோது குனதிலகா 76 ரன்களில் ரன் அவுட் ஆனார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெண்டிஸ் 89 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இதனையடுது, களமிறங்கிய பெரேரா மற்றும் கேப்டன் மேத்யூஸ் நிதானமாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. 49-வது ஓவரில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வரும் 11-ம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது