காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க யாரோடு வேண்டுமானாலும் பேச தயார் – ராஜ்நாத் சிங்
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக யாரோடு வேண்டுமானாலும் பேச அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக யாரோடு வேண்டுமானாலும் பேச அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த இரண்டாண்டுகளாக அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது. குறிப்பாக ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி மற்றும் சப்ஸார் அகமது ஆகியோர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அங்கு அதிக அளவிலான போராட்டங்கள் நிலவி வருகின்றது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் பா.ஜ.க அரசின் மூன்றாண்டுகள் சாதனையை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,” காஷ்மீர் அப்பாவி இளைஞர்களை தூண்டிவிடுபர்கள் அந்த இளைஞர்களை அவர்களின் சொந்த குழந்தை போல் பார்க்கவில்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்தில் ஒவ்வொரி தீர்வையும் பேச்சுவார்த்தை மூலமே அடைய முடியும் என முன்னரே கூறியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “காஷ்மீர் பிரச்சினையில் சுமூகமான நிரந்தர தீர்வை கொண்டு வரவே நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். அதற்காக யாரோடு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது” என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் மத்திய அரசின் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.