ஈராக்: கடந்த இரு வாரங்களில் மட்டும் 230 பொதுமக்களை கொன்றுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் இயக்கத்தினர் கடந்த இரு வாரங்களில் மட்டும் 230 பொதுமக்களை கொன்று குவித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் இயக்கத்தினர் கடந்த இரு வாரங்களில் மட்டும் 230 பொதுமக்களை கொன்று குவித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது பெருமளவு தங்கள் வசமிருந்த பகுதிகளை அரசுப்படையினரிடம் இழந்து வருகின்றனர். இதனால், தங்களது ஆத்திரங்களை தீர்த்துக்கொள்ள அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ் அமைப்பின் வசமிருந்த பழமையான மொசூல் நகரை ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது. இதனால், கொதிப்படைந்த அவர்கள் கடந்த வாரம் பாக்தாத் நகரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் பார்லர் அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். ரமலான் மாதம் என்பதால் அதிக அளவிலான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
அப்போது, காரிலிருந்த வெடிகுண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்த கோர தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மறுதினம் மொசூல் நகரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், ஷாஞ்சி மற்றும் சாரியா நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 230 பொதுமக்கள் இவ்வாறான தாக்குதல்களில் பலியானதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.