பலூசிஸ்தானில் இரண்டு சீனர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தானில் உள்ள ஜின்னா சீனாவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றது. அங்கு வசிக்கும் சீனர்கள் மந்தரின் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பலூசிஸ்தானில் உள்ள மஸ்தாங் மாவட்டத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தமது ஆதரவாளர்கள் இரண்டு சீன நாட்டினரை கொன்றுள்ளதாக ஐ.எஸ் இணையதள செய்தியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே 24-ம் தேதி குவெட்டா மாகாணத்தில் உள்ள ஜின்னா நகரில் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த சிலர் கடத்தப்பட்டனர்.
சீன பாகிஸ்தான் பொருளாதார திட்டம் காரணமாக பாகிஸ்தானில் வாழும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இவர்களது பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் அரசு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை சீனர்கள் வாழும் பகுதியில் குவித்துள்ளது.