ஆப்கானிஸ்தான் உடனான உறவை சிதைக்க இந்தியா சதி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தான் நாட்டுடனான உறவை சிதைக்க இந்தியா சதி செய்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லைப் பிரச்சனை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. சர்வதேச எல்லை கோட்டு பகுதியில் நடைபெறும் அத்துமீறல் குறித்து இருநாட்டு தரப்பிலும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான உறவை சிதைக்க இந்தியா சதி செய்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜகரியா கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் இந்தியா ஒரு துரோக விளையாட்டை விளையாண்டு கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துகிறது.
மேலும் பாகிஸ்தான் – ஆப்கான் இடையிலான உறவை சீர்குலைக்க சதித்திட்டம் செய்கிறது. காஷ்மீரில் நடைபெறும் வன்முறை சம்பங்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப இந்தியா இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது” என்றார்.