மலேசிய அரசிடம் வைகோ கைதுக்கு விளக்கம் கேட்க வேண்டும்: சுஷ்மா சுவராஜுக்கு தமிழிசை கடிதம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு மலேசிய அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என சுஷ்மா சுவராஜூக்கு தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ம.தி.மு.க. தலைவர் வைகோ மலேசியாவில் நடத்தப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது. முதலில் விசா வழங்கி விட்டு பின்பு தடுப்பது சரியான நடவடிக்கை அல்ல.
அவர் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். மலேசிய அரசிடம் இதற்கான விளக்கம் கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.