கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் கடையடைப்பு: வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அறிவிப்பு
திராமங்கலம் மக்களுக்கு ஆதர வாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்துக்கு நேற்று மாலை சென்ற அவர், அப்பகுதி மக்கள் மற்றும் கும்பகோணம், மயிலாடுதுறை, கதிராமங்கலம் வணிகர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறியதாவது: கதிராமங்கலம் மக்களின் போராட்டம் 100 சதவீதம் நியாயமானது, நேர்மையானது. இவர்கள் காந்திய வழியில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தொடரும்
எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இப்பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களுடைய கோரிக்கை களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். எனவே, இப்பகுதி மக் களின் கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும். இல்லை யென்றால், விரைவில் ஒருங் கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்டங்களில்) உள்ள அனைத்து வணிகர்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட் டம் நடத்தப்படும். மேலும், அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதுவரை கதிராமங்கலத் தில் வியாபாரிகளின் கடை யடைப்பு போராட்டம் தொடரும் என்றார்.
7-வது நாளாக கடையடைப்பு
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகத்துக்கு எதிராக போராடி யதற்காக கைது செய்யப்பட்டவர் களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, கடந்த 1-ம் தேதி முதல் அங்கு கடையடைப்பு போராட்டம் நடை பெற்று வருகிறது. தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதேபோல, அவ்வூரில் உள்ள கார்- வேன்- ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகோ வலியுறுத்தல்
கதிராமங்கலத்தில் கைதானவர் களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்துவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இலங்கையில் இறந்தவர் களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத் தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கண்டனத்துக் குரியது. அவர்களை உடனே விடுவிக்க வேண்டும். கதிராமங் கலத்தில் கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களை விடுவிக்கக் கோரி வருகிற 10-ம் தேதி பழ.நெடுமாறன் தலைமையில் கதிராமங்கலத்தில் நடைபெறும் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம் என்றார்.