ஸ்மார்ட் அட்டையில் இலவசமாக திருத்தம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் தகவல்
ஸ்மார்ட் குடும்ப அட்டையில் இலவச மாக திருத்தம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் களை நடத்த வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 கோடியே 97 லட் சம் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்கவும், போலி குடும்ப அட்டை களை ஒழிக்கவும், ஆதார் எண்களு டன் குடும்ப அட்டை விவரங்களை இணைத்து ஸ்மார்ட் குடும்ப அட்டையை கடந்த ஏப்ரல் முதல் தமிழக அரசு வழங்கி வருகிறது.
மொழிபெயர்ப்பால் பிழை
இந்த ஸ்மார்ட் அட்டையில் அச்சிடுவதற்கான பயனாளிகளின் விவரங்கள், ஆதார் நிறுவனமான யுஐடிஏஐ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. அதில் ஆங்கிலத்தில் மட்டுமே விவரங்கள் கிடைத்தன. அதை தமிழாக்கம் செய்யும்போது பல பிழைகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள விவரங்களைச் சேர்க்கும்போது, அதிலும் பல பிழை கள் இருந்தன. இதனால் தற்போது அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பல் வேறு பிழைகளுடன் உள்ளன.
இந்நிலையில், அரசு இ-சேவை மையங்களில் ரூ.60 கட்டணத்தில் பிழைகளைச் சரி செய்து, ரூ.30 கட் டணம் செலுத்தி, திருத்தப்பட்ட ஸ்மார்ட் அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு கேபிள் டிவி நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கிடையில், தாங்கள் செய்யாத தவறுக்கு ஏன் ரூ.90 செலுத்தி ஸ்மார்ட் அட்டையை திருத்த வேண்டும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு கட்டணம் செலுத்தித் திருத்தம் செய்ய எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
ஸ்மார்ட் அட்டையில் இடம் பெறும் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். அதில் பிழைகள் இருந்தால், பொதுமக்கள் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, திருத்தமும் செய்துக்கொள் ளலாம்.
ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் இருக்க லாம். அதனால் இ-சேவை மையங் களில் திருத்தும் வசதியும் ஏற்படுத் தப்பட்டது. அதற்கு ரூ.60 செலவிட வேண்டியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தி இருப்பது, எங்கள் கவனத்துக்கு வந்தது.
இலவச திருத்த முகாம்
அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் ஸ்மார்ட் அட்டை களை இலவசமாக திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. அந்த முகாம் களில் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை யில்லை. மேலும் கல்லூரி மாணவர் களுக்கு கணினி பயிற்சி அளித்து, அவர்களை வீடு வீடாக அனுப்பி, ஸ்மார்ட் அட்டை திருத்தம் மேற் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அச்சம் தேவையில்லை
ஸ்மார்ட் அட்டையில் விவரங் கள் தவறாக இருப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. அதை ஒரு அடையாள ஆவணமாக ஏற்கமாட்டோம் என பாஸ்போர்ட் வழங்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அட்டையில் உள்ள ‘கியூஆர் கோடு’ மூலமாக தான் நாம் பொருட்களை வாங்கப் போகிறோம். மக்களின் மன நிறைவுக்காக தான் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.