ரூ.2,400 கோடி செலவில் ராணுவ கவச வாகனங்கள் நவீனமயம்: பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
ராணுவ மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், ராணுவத்தில் உள்ள கவச வாகனங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ராணுவ மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், ராணுவத்தில் உள்ள கவச வாகனங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். கவச வாகனங்கள் இரவு நேரத்திலும் திறம்பட செயல்படுவதற்காக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
ராணுவத்தில் 2 ஆயிரத்து 500 கவச வாகனங்கள் உள்ளன. தெலுங்கானா மாநிலம் மேடக்கில் உள்ள அரசுக்கு சொந்தமான போர்த்தளவாட தொழிற்சாலையில் இந்த கவச வாகனங்கள் நவீனமயமாக்கும் பணி நடைபெறும்.