சாம்சங் ஆன் மேக்ஸ் இந்தியாவில் வெளியானது
சாம்சங் நிறுவனத்தின் ஆன் மேக்ஸ் ஃபிளாக்ஷிப் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஆன் மேக்ஸ் அம்சங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஆன் மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் ஆன் மேக்ஸ் சாம்சங் பே மினி வசதியை கொண்டுள்ளது. இத்துடன் 2x மெசன்ஜர் வசதி, புகைப்படங்களை அழகாக்கும் கூடுதல் ஃபில்ட்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக பகிரந்து கொள்ளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனினை தேர்வு செய்யப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும் என்றும், மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஆன் மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
* 5.7 இன்ச் 1080×1920 பிக்சல் FHD டிஸ்ப்ளே
* மீடியாடெக் லைட் ஆக்டா கோர் பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
* 13 எம்பி செல்பி கேமரா, f/1.9 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
* மைக்ரோ யுஎஸ்பி
சாம்சங் ஆன் மேக்ஸ் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பில் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைப்பதோடு, இரு மாடல்களும் இந்தியாவில் ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.