நாச்சிமுத்து ஜெகநாதன் கல்லூரி விழா
ஈரோடு மாவட்டம், சென்னிமலை எம்பி நாச்சிமுத்து ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில், 12ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் கே.ஜி.பார்த்திபன் வரவேற்று பேசினார். இதில், கல்லூரி ஆலோசகர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.
286 பேருக்கு பட்டம்
விழாவில், சிறப்பு விருந்தினராக, ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தைச் சேர்ந்த பொங்கினன் ஆகியோர் கலந்து கொண்டு, 286 மாணவ, மாணவிகளுக்கு, பட்டம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-–
ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாடு கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்ற துறைகளில், சிறந்து விளங்க வேண்டும்.
திறமைகளை வளருங்கள்
மாணவர்கள் பலபேர் நம்நாட்டில் படித்து, வெளிநாடுகளில் வேலை செய்து, அந்த நாட்டை முன்னேற்றுவதைவிட, நம் நாடு முன்னேற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் பேசுகையில், மாணவர்கள் எந்த ஒரு செயலையும், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து செய்ய வேண்டும் என்றும், மிகவும் போட்டிகள் நிறைந்த உலகில் வசிப்பதால், மாணவர்கள் தங்கள் திறமைகளை திறம்பட வளர்த்து கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
விழாவில், சதீஸ்திவான் விண்வெளி ஆராய்ச்சியாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கவிதா, பேராசிரியர் அருண் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.