சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் க்விஸ் மன்றம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்து, கல்லாறுப்பகுதியில் அமைந்துள்ள, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், சச்சிதானந்தா வினாடி வினா மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில், எஸ்பிஓஏ பள்ளியின் நூலகர் சிவராமன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்கின்ற வழிமுறைகளை விளக்கினார்.
நாளிதழ்கள் வாசியுங்கள்
அத்துடன், பல்வேறு துறைகளில் நடக்கின்ற, வினாடி வினா போட்டிகளுக்குத் தயாராகின்ற வகையில், நாள்தோறும் நாளிதழ்களை வாசிக்கின்ற வழக்கத்தை, மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், பள்ளியின் துணைச்செயலர் மு.ஞானபண்டிதன், கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, பள்ளித்துணை முதல்வர் சக்திவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வினாடி வினா மன்றப்பொறுப்பாசிரியர் பி.முருகேசன் வரவேற்றார், ஆசிரியை சுமிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.