ஊட்டியில் மெழுகு சிலை காட்சியகம்
மலைகளின் அரசியாக திகழும் உதகையில், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட, பலதரப்பட்ட சுற்றுலாத் தலங்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த பட்டியலில், தற்போது புதிதாக சேர்ந்திருப்பது ‘வேக்ஸ் பிளானெட்’ என்றழைக்கப்படும், மெழுகு அருங்காட்சியகம். மெழுகு சிற்பங்களை வடிவமைப்பதில், உலகிலேயே முன்னோடியாக திகழும் லண்டனிலுள்ள ஒப்பற்ற மெழுகு சிலை நிறுவனமாக, ‘மேடம் டஸீட்ஸ்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, இந்த அருங்காட்சியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இதன் இயக்குநர் தெரிவித்தார்.
இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்களான காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரெசா, அப்துல் கலாம் உள்ளிட்ட தலை சிறந்த தலைவர்கள் உருவங்களுக்கு, உயிரோட்டம் அளித்ததை போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய பிரதமர் புடின், முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா, அதிபர் டிரம்ப், சமூக சேவகர் அன்னா அசாரே, சச்சின் டெண்டுல்கர், கால்பந்து விளையாட்டின் முன்னணி நட்சத்திரமான மெர்ஸ்சி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் உருவம், சினிமா நடிகர்களின் உருவங்கள், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு காலமாக, மெழுகு அருங்காட்சியகத்தை அமைக்க அரும்பாடுபட்டு, 31 உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதாக, அருங்காட்சியக இயக்குநர் தெரிவித்தார்.