அக்ஷயா பொறியியல் கல்லூரியில் பயிற்சி வகுப்பு
அக்ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின், கட்டிடப் பொறியியல் துறை மற்றும் கேட் லீடர் நிறுவனம் இணைந்து நடத்தும், 5 நாட்களுக்கான, மதிப்புக்கூறு செயல்முறை வகுப்பு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த வகுப்புக்கான கருத்தரங்கில், அக்ஷயா கல்லூரி நிர்வாக அறங்காவலர் நாகராசன், கல்லூரி தலைவர் சுப்ரமணியன் மற்றும் செயலாளர் பவித்ரன், இயக்குநர் தனுஷ்கோடி, இணை இயக்குநர் சுகுணா, முதல்வர் ஜெயா மற்றும் கட்டிடப்பொறியியல் துறைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு, இப்பயிற்சி வகுப்பினை சிறப்பித்தனர். கேட் லீடர் கோவை பொறுப்பாளர் மோகன் குமார், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-–
இன்றைய பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தார். மேலும், கேட் லீடர் நிறுவன பயிற்சியாளர்கள் பிரிமவேரா மென்பொருள் பற்றியும், அதன் செயல் முறை விளக்கம் பற்றியும், முன்னுரை வழங்கினர்.
அவர்கள், இந்த மென்பொருள் அடிப்படை கருத்துக்கள் மற்றும் மென்பொருள் நடைமுறை துறையின் பயன்பாட்டினை, மாணவர்களுக்கு விளக்கினார். இந்த பயிற்சி வகுப்பில், இரு பரிமான, முப்பரிமான மாதிரிகள் மற்றும் அவற்றின் அனிமேஷன்களை உருவாக்குதல் பற்றி விளக்கப்பட்டது.
அதனுடன், பல்வேறு மாதிரி வடிவங்களை, பயிற்சி வகுப்பில், மாணவர்களுக்கு அளித்து, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் சிந்தனை வளர்க்கப்பட்டது. இந்த திட்டத்தின், பிரதம கவனம், அந்தந்த துறைகளின் மேம்பாட்டினை மற்றும் பகுப்பாய்வு சிந்தனைகளை, மாணவர்களுக்கு உருவாக்க வேண்டுமென்பதாகும்.
இந்த பயிற்சி வகுப்பில், மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.