கரூரில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
கரூர் நகராட்சிப் பகுதிகளில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகராட்சி அலுவலக புதிய கட்டிட கட்டுமான பணிகள், ரூ.3 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு பயன்பாட்டு மைய கட்டிடம் மற்றும் ரூ.13.02 கோடி மதிப்பீட்டிலான குளத்துப்பாளையம் குகை வழிப்பாதைக்கான பணி, பசுபதிபாளையம் குகை வழிப்பாதை பணிகளையும், கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதில், பல்நோக்கு பயன்பாட்டு மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த போது, கட்டுமான பணிகளுக்கு வைக்கப்பட்டிருந்த செங்கல்களை, தண்ணீரில் மூழ்கி, உடைத்து பார்த்து, அதன் தரத்.தினை ஆய்வு செய்தார். தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்திட, அலுவலர்களுககு அறிவுறுத்தினார்.
பணிகள் விரைவில் முடியும்
கரூர் நகர மற்றும் மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக, கரூர் ரெயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள், போக்குவரத்து நெரிசலின்றி, புறவழிச் சாலை வழியாக, நகருக்கு வெளியே செல்ல ஏதுவாக, பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையம் பகுதிகளில், குகைவழிப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது, நகராட்சி கமிஷ்னர் அசோக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்ரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நகராட்சி உதவிப்பொறியாளர் பேரின்பம், வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.