சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா விழா
மயிலாப்பூர் சாய்பாபா கோயி லில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாப்பூர், அலுமேலுமங்கா புரம் பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் ஆண்டு தோறும் தமிழ் மாதமான ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத் தன்று, குரு பூர்ணிமா விழா கொண் டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பூர்ணிமா விழா, அக்கோயிலில் நேற்று நடைபெற் றது.
இதையொட்டி கோயிலில், அதிகாலை 5 மணிக்கு காகட ஆரத்தியுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 6 மணிக்கு பால் அபிஷேகம் மற்றும் தீப ஆராதனையும், 7 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனையும், 8 மணிக்கு சிறப்பு தீப ஆராதனையும் நடை பெற்றது.
அதன் பின்னர் காலை 9 மணிக்கு குரு பூர்ணிமா வியாச பூஜை தொடங்கியது. அப் போது பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சி யாக 10 மணிக்கு சாய்பாபாவுக்கு விசேஷ ருத்ராபிஷேகம் நடை பெற்றது. அந்த காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்குரான் சொற்பொழிவு
பின்னர், சொற்பொழிவாளர் மவுல்வி மொஹைதீன் சாஹூல் அமீது பங்கேற்று, திருக்குரான் குறித்து சொற்பொழிவு நிகழ்த் தினார். அதை ஏராளமான பக்தர் கள் கேட்டு ரசித்தனர்.
விழாவில் கோயில் நிர்வாகத்தின் செயலர் கே.தங்கராஜ், பொருளா ளர் ஏ.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.