ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா?- தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் உள்ளனரா என மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது என்ற இளைஞரை, அம்மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால், ஐஎஸ் இயக்கத்துக்கு நிதி உதவி செய்திருப்பதாக புகார் எழுந்தது. அவர், ஏற்கெனவே தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், சென்னையைச் சேர்ந்த மேலும் 4 பேர் ஐஎஸ் இயக்கத்துக்கு நன்கொடை அளித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது. இதில், சென்னை கொண்டித்தோப்பு சக்கரை செட்டித் தெருவைச் சேர்ந்த பர்மா பஜார் வியாபாரி ஹாரூண் ரஷீத் (36) என்பவர் ஐஎஸ் இயக் கத்துக்கு நன்கொடை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை ராஜஸ் தான் மாநில போலீஸார் கடந்த திங்கள் இரவு கைது செய்து ராஜஸ்தான் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், ஹாரூணின் உறவினர்களான மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி ராஜஸ்தான் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், ஐஎஸ் இயக்கத் துக்கு ஆதரவானவர்கள் என தமிழ கத்தில் 11 பேரை ராஜஸ்தான் போலீஸார் அடையாளம் கண்டுள்ள தாக தகவல் வெளியானது. ஆனால், உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் உள்ளனரா என மத்திய, மாநில உளவு பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் மீதும், குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்படு பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *