வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ஏராளமானோர் விண்ணப்பித்தனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள் ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத் தப் பணி அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரங்களின்படி, சென்னை மாவட் டத்தில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 40 லட்சத்து 58,602 வாக் காளர்கள் உள்ளனர். அதில் 20 லட் சத்து 6,036 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 51,598 பெண் வாக்கா ளர்களும், 968 இதர வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணி ஜூலை 1-ம் தேதி தொடங்கி, இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, பொது மக்களின் வசதிக்காக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளான நேற்று, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங் களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

5951 விண்ணப்பங்கள்

நேற்று மொத்தம் 3 ஆயிரத்து 768 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 5 ஆயிரத்து 951 விண்ணப்பங்கள், இளம் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஜூலை 1 முதல் நடந்து வரும் நிலையில், இதுவரை மொத்தம் 6 ஆயிரத்து 273 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

ஆலந்தூரில்…

ஆலந்தூர் சட்டப்பேரவை தொகு திக்குட்பட்ட கன்டோன்மென்ட் பள்ளியில் நடைபெற்ற முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உடனி ருந்தார்.

இதேபோன்ற சிறப்பு முகாம், வரும் ஜூலை 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *