ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி (சிலீப்பர்) கொண்ட பெட்டியில் கீழ்படுக்கை வசதி (‘லோயர் பெர்த்’) ஒதுக்கப்படுகிறது. ஏ.சி. ரெயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கை வசதி ஒதுக்கீடு: ரெயில்வே நிர்வாகம் முடிவு புதுடெல்லி: ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி (சிலீப்பர்) கொண்ட பெட்டியில் கீழ்படுக்கை வசதி (‘லோயர் பெர்த்’) ஒதுக்கப்படுகிறது. ஆனால் குளிர்சாதன பெட்டியில் (3 ஏ.சி.) இந்த வசதி இல்லை. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக் கான பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் சுபர்னா ராஜ், சமீபத்தில் நாக்பூர் – நிஜாமுதீன் ‘கரிப் ராத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஏ.சி. பெட்டியில் மேல் படுக்கை (‘அப்பர் பெர்த்’) வழங்கப்பட்டு இருந்தது. அவரால் மேல் படுக்கையில் ஏற முடியாததால், தரையில் படுத்து தூங்கினார். இந்த சம்பவம் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபுவின் கவனத்திற்கு வந்தது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கை வசதி (’லோயர் பெர்த்’) ஒதுக்கீடு செய்து ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி (சிலீப்பர்) கொண்ட பெட்டியில் கீழ்படுக்கை வசதி (‘லோயர் பெர்த்’) ஒதுக்கப்படுகிறது.
ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி (சிலீப்பர்) கொண்ட பெட்டியில் கீழ்படுக்கை வசதி (‘லோயர் பெர்த்’) ஒதுக்கப்படுகிறது. ஆனால் குளிர்சாதன பெட்டியில் (3 ஏ.சி.) இந்த வசதி இல்லை.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக் கான பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் சுபர்னா ராஜ், சமீபத்தில் நாக்பூர் – நிஜாமுதீன் ‘கரிப் ராத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஏ.சி. பெட்டியில் மேல் படுக்கை (‘அப்பர் பெர்த்’) வழங்கப்பட்டு இருந்தது. அவரால் மேல் படுக்கையில் ஏற முடியாததால், தரையில் படுத்து தூங்கினார்.

 

இந்த சம்பவம் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபுவின் கவனத்திற்கு வந்தது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கை வசதி (’லோயர் பெர்த்’) ஒதுக்கீடு செய்து ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *