கலவரம் வரும்; பொன்.ராதா எச்சரிக்கை
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கிய கோடநாடு பங்களா மர்மம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் அவர் கூறியதாவது:கோடநாடு பங்களா மர்மம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை. அ.தி.மு.க.,வினருக்குள் பிரச்னை வந்து ஆட்சி வீழ்ந்தால் அது அவர்கள் பிரச்னை. ஒரு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட மாட்டார்களா. எனவே தான் தமிழகத்தில் கலவரமாக மாற வாய்ப்பு உண்டு என எச்சரிக்கை தான் செய்தேன். ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. எனவே தான் கலவரம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தான் நான் கூறுகிறேன். மேற்கு வங்க சூழ்நிலை தமிழகத்தில் வர வேண்டும் விரும்புகிறார்களா. தமிழகத்தில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.