ஓ.பி.எஸ்., தோட்டம் முற்றுகை
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தோட்டத்தை சிலர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பெரியகுளம், லட்சுமிபுரம் பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் ராட்சத கிணறு தோண்டும் பணி நடந்தது. இதன் காரணமாக நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என இப்பகுதியினர் ஓ.பி.எஸ்., தோட்டத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவரது தோட்டம் அருகே போலீசார் குவிக்கபபட்டனர்.