ஆரணி ஒன்றியத்தில் 120 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 120 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 52 ஆயிரம் – மதிப்பீட்டில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான வேலை உத்திரவுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை பகுதியில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ வாழும் நபர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 120 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 52 ஆயிரம் – மதிப்பீட்டில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான வேலை உத்திரவுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் ஆரணி எம்.பி. செஞ்சி.சேவல்.வே.ஏழுமலை மேற்கு ஆரணி ஒன்றிய முன்னால் சேர்மன் வக்கீல் கே.சங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு மாவட்ட இணை செயலாளர் (செய்யார்) விமலாமகேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் டி.கருணாகரன் ரமணிநீலமேகம், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் அ.கோவிந்தராசன், எஸ்.சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கொளத்தூர் பி. திருமால், புங்கம்பாடி பி.சுரேஷ், பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு, சைதை கே.சுப்பிரமணி, இளைஞரணி குமரன், பையூர் ஆர். சதீஷ்குமார், வேலப்பாடி எஸ்.பி.சரவணன், களம்பூர் ஜெயலலிதா பேரவை நிர்வாகி எஸ்.பி.தாமோதரன், ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர். சுரேஷ்ராஜா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *